மனைவி தனது கணவருக்கு தீ வைத்த செய்தி ஒன்று மொரட்டுமுல்ல, சமரகோன் காணி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் நீண்ட காலமாக வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த உறவு காரணமாக தம்பதியினருக்கு இடையில் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மொரட்டுமுல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி அவரின் உடலில் தீ வைத்து எரித்ததில் அந்த நபரின் கால்கள் இரண்டும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், குறித்த பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, கணவர் தன்னை கோடரியால் தாக்கியதாகவும் தான் இறந்துவிட்டதாக நினைத்து தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.