கொலன்னாவை - கொதடுவை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (18) இரவு 8.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டைச் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
“ராஜா” என்று அழைக்கப்படும் கிஹான் மதுஷங்க என்ற 41 வயதான நபரொருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், என்ன காரணம் என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.