(தமிழரசன்)
ஊறுபொக்க தொலமுள்ள பிரதேசத்தில் பெண்ணொருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
கங்கானம் கமகே சித்தாரி மதுமாலி வயது (29) என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இவர், தம்பால கணிஸ்ட வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடைமையாற்றி வருகிறார். இவர் பாடசாலையிலிருந்து இன்று (14) 02.15 மணியளவில் தனது வீட்டுக்கு நடந்து வரும்போது, அவரின் காதலன் மறைந்திருந்து கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்து பெண்ணின் மாமா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த இடத்திலேயே கொலை செய்யப்பட்ட நபர் இறந்து விட்டதாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், மேலும் தெரியவருவதாவது, காதல் தகராற்றின் காரணமாகத்தான் இச்சம்பவம் நடத்திருகலாம் என பொலிசார் சந்தேகிப்பதாகவும், இவ்வாறு குறித்த பெண்ணை கொலைசெய்ததாக சந்தேகிக்கும் (32 ) வயதுடைய அசங்க லியனாராச்சி என்பவர் பொல்பளாதெனிய கீரிபிட்டிய என்ற இடத்திலுள்ள மரம் ஒன்றில் ஏறி கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தானும் சாகப்போரதாக கூறியுள்ளதாக
பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின்போது தொரிய வருகிறது.
பின்னர் பொதுமக்களும், பொலிசாரும் இணைந்து பெரும் பிரயத்தனத்தில் குறித்த நபரை கீழே இறக்கச்செய்து கைது செய்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் ஈகொட வைத்தியசாலையிலிருந்து மாத்தறை வைத்தியசாலைக்கு மரண பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.