பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணையுடன் புதிய பாராளுமன்றத்திற்கு அனுமதி வழங்குங்கள் என முன்னாள் MP முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேறைய ஊடக சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.
அதிகாரம் தொடர்பாக குலத்தவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் இந்நாட்டு மக்களுக்கு விளைந்த பயண் ஏதுமில்லை*.
*அதிகாரம் குறித்த பிளவே மொட்டுக்கும் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ளது*.
*உலகிலுள்ள பல நிறுவனங்கள் நமது நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளன.
* இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எமது நாட்டின் பொருளாதாரம் 11.5 வீதத்தால் சுருங்கியுள்ளதாக இலங்கை சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
* ஒரு சராசரி குடும்பத்தின் சாதாரண மாதாந்தச் செலவு எழுபத்தாறாயிரம் ரூபா வரை உயர்ந்துள்ளது.
* கடந்த ஆண்டை விட அனைவரினது வருமானமும் அறுபது சதவீதத்தால் குறைந்துள்ளது.
* சர்வதேச நிறுவனங்களின் ஆய்வுகளின் பிரகாரம்,2019 இல் 11.9% ஆக இருந்த வறுமை விகிதம் இன்று 24% ஆக அதிகரித்துள்ளது.
*ஒரு நபரின் நாள் வருமானம் மூன்று டொலர்களாக மாறியுள்ளமை மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.
* சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்ட பணமே தற்போது புலக்கத்தில் இருக்கிறது.ஆனால் நாடு இன்னும் ஒரு உற்பத்தி செயல்முறைக்கு வழிநடத்தப்படவில்லை.இதனால் நாட்டில் எதிர்கால எந்த முன்னேற்றத்தையும் எம்மால் காண முடியாதுள்ளது.
* தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையில்லாப் போக்கு அதிகரித்து வருகிறது.இவற்றுக்கு மத்தியில் செயலாற்றுகைகளை உண்மையாகவே தூண்டும் விதத்திலன்றி அமைச்சரவை அமைச்சர்கள் வெறுமனே பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
* முதலீட்டாளர்கள் முதலீடு செய்யக் கூடிய அரசியல் சூழல் இந்நாட்டில் இல்லை.
* தற்போதைய அரசாங்கம் இருக்கும் பொருளாதாரத்தையும் அழிவை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.
* பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணையுன் ஊடான புதிய பாராளுமன்றத்திற்கு அனுமதி வழங்குங்கள்.
* திருடப்பட்ட, நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர்கள் இன்றும் மக்கள் பணத்தால் பராமரிக்கப்படுகின்றனர்.
*மொட்டுக் கட்சியையும் பசில் ராஜபக்சவையும் மகிழ்விப்பதையல்ல ஜனாதிபதி செய்ய வேண்டியது.
* கடந்த மாதம் 31 ஆம் திகதி திரைசேறி உண்டியல்கள் ஏலத்தில் நூற்று அறுபது பில்லியன் ரூபாவும்,இம்மாதம் முதலாம் திகதி நடந்த ஏலத்தில் 40 பில்லியன் ரூபாவும் கொள்வனவு செய்யப்பட்டன.இவற்றை 25.65 வட்டி விகிதத்திலையே பெறப்பட்டுள்ளன. முதலாம் திகதி இரவிலிருந்து வட்டி விகிதத்தை 2.5% குறைக்க நிதிக்குழு முடிவு செய்துள்ளது.
* மத்திய வங்கியால் இதனை தாங்கிக் கொள்ள முடியாது.இதனால் ஒரு நாள் ஐந்து பில்லியன் ரூபா வீதம் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
* நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ள இந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னின்று நடத்துபவர்கள் சிறு பிள்ளைத்தனமாக முடிவெடுத்துள்ளதால் இது குறித்து நாட்டில் நியாயமானதொரு சந்தேகம் எழுந்துள்ளது.
* இது தொடர்பாக நிதி அமைச்சர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
*ஐக்கிய மக்கள் சக்தியாகி நாமும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளித்து இந்த விவகாரத்தை விசாரிக்க கோருவோம்.
* பொதுஜன பெரமுனவின் எதிர்கால நம்பிக்கை எனக் கருதப்படும் நாமல் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கம் யாருடைய அரசாங்கம் என்று கேட்கிறார்,அவருக்கு அமைச்சுப் பதவியை தவிர ஏனைய அனைத்தையும் அனுபவிக்கிறார்.
* நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டு, தற்போது வரி அதிகரித்து விட்டதாக கூறுகிறார்கள்.ஆனால் எல்லா விடயங்களுக்கும் நாடாளுமன்றத்தில் கைதூக்கி விட்டு தற்போது போலியாக வரி அதிகரிப்பு குறித்து கூறுவது நகைப்புக்குரியது.
* நாமல் ராஜபக்ஷ அவர்கள் மக்கள் குறித்து,மக்களை மிகவும் நேசிப்பவராக இருந்தால்,தேர்தலுக்குச் செல்லக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்குமாறு கோருகிறோம்.
* நாட்டை சிங்கப்பூராக உருவாக்குவதை விடுத்து, நாட்டை அழித்த அரசியல் தலைவர்களுடனே ஜனாதிபதி ரணில் இருக்கிறார்.அவர் இன்று எந்தத் தரப்பில் கைகோர்த்துள்ளார் என அவருக்கு நன்றாகவே தெரியும்.
* 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் திருடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏன் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்பதையும்,அதில் செல்வாக்குச் செலுத்தியவர்கள் யார் என்பதையும் அவர் அறிவார்.
* இப்போது சிறு குழந்தைகளுக்கு கதை சொல்லி நடந்து வருகிறார் ஜனாதிபதி.அவர் முதலில் கண்ணாடி முன் சென்று,
இந்நாட்டை சிங்கப்பூராக மாற்றும் தரப்புடனா அல்லது இந்நாட்டை சிம்பாவே ஆக ஆக்கும் தரப்புடனா தான் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.
* ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் முதன்மை நோக்கம் ராஜபக்சர்கள் அரசியலில் மீள் எழுச்சி பெறுவதே.இது ராஜபக்ஷ குடும்பத்தின் தீர்மானம்.
* இந்நாட்களில் மொட்டு எம்.பி.க்கள் குழுவொன்றை விக்கிரமசிங்க தன் பக்கம் சாய்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது.இதனால்தான் ராஜபக்ச குடும்பம் கோபத்துடன் குழம்பிப் போயுள்ளது.
* அதிகாரம் தொடர்பாக குலத்தவர்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதால் இந்நாட்டு மக்களுக்கு இதனால் விளைந்த எந்தப் பயனும் இல்லை.
* அதிகாரம் குறித்த பிளவே மொட்டுக்கும் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ளது.
* தங்களின் அதிகார இருப்பை பேணிக்கொள்ள பாராளுமன்றத்திற்குள் சகலதிற்கும் கைதூக்கும் மொட்டு இப்போது பாராளுமன்றத்திற்கு வெளியில் விக்கிரசிங்கவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
* இந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் அபிப்பிராயம் காணப்படுவதோடு அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப ஊடக செய்திகளை வசப்படுத்த முயற்சிக்கின்றன.
*உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்ட மூல ஆணைக்குழுவின் உறுப்பினர்களைப் பார்த்தால் ஜனாதிபதியும் அமைச்சருமே நியமனத்தை மேற்கொள்ள முடியும் என்பதை காணமுடிகிறது.எது உண்மை எது பொய் என்ற அளவுகோலை உருவாக்குபவர்களும் இவர்களே. அனைத்து ஊடக நிறுவனங்களையும் நடத்த விரும்பினால், இந்த ஆணைக்குழுவின் அளவுகோல்களை தங்கள் ஊடக நிறுவனங்களில் பிறப்பிக்க வேண்டும். யாராவது இதற்கு சவால் விடுத்தால்,ஆணைக்குழு அடுத்த ஆண்டு உரிமத்தை நிறுத்தி வைக்கலாம்.
*தமக்கு எதிரான கருத்துக்களை வெளிக்காட்ட விடாமல் தடுப்பதையே அரசாங்கம் இந்த ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்ட மூலத்தின் ஊடாக மேற்கொள்ள விரும்புகிறது.