சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்கவை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் (13.06.2023) நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, சப்ரகமுவ ஆளுநராக பதவி வகித்த டிக்கிரி கொப்பேகடுவ அண்மையில் தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.