SMZ. சித்தீக்
நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் கா.பொ.த (சா/த) பரீட்சைக்காக வழங்கப்பட்ட விடுமுறையின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இன்று சனிக்கிழமைஇறக்காமம் கல்விக் கோட்டத்தில் உள்ள கமு/சது றோயல் கனிஷ்ட கல்லூரியில் அதிபர் எம். ஏ .எம் பஜீர் அவர்களின் தலைமையில் சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேறுக் குழுவினர், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த வெப்பமான காலநிலை கொண்ட சூழ்நிலையில் இந்நிகழ்வில் மனங்கோணாமல் வந்து கலந்து கொண்டோருக்கு அதிபர் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக எமது செய்திக்குத் தெரிவித்துள்ளார்.