இளைஞர்கள் சபை வெற்றிக்கிண்ணம் : சம்பியனானது பாலமுனை அரபா விளையாட்டு கழகம்.

Dsa
0

 


 நூருல் ஹுதா உமர்


பாலமுனை  இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற "இளைஞர்கள் சபை வெற்றிக்கிண்ணம்" க்கான போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்டார் அணியை வீழ்த்தி பாலமுனை அரபா விளையாட்டு கழகம் வெற்றி பெற்று இளைஞர்கள் சபை வெற்றிக்கிண்ண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.



புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பெற்ற பாலமுனை அல்- அரபா விளையாட்டு கழகம் மற்றும் ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியிக்கு தகுதி பெற்றது.



இன்று செவ்வாய்க்கிழமை (27) பாலமுனை பொதுமைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாலமுனை அல்- அரபா விளையாட்டு கழகம் நிர்ணயித்த ஐந்து ஓவர்கள் முடிவில் 05 விக்கட்டுக்களை மட்டும் இழந்து 65 ஓட்டங்களை பெற்றனர். 66 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டு கழகம் ஐந்து ஓவர்களையும் சந்திதித்து 04 விக்கட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை பெற்றனர். 01 ஓட்ட வித்தியாசத்தில் பாலமுனை அரபா விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது. 


இதில் வெற்றி பெற்ற அணிக்கு 30,000 ரூபாய் பணபரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு 15000 ரூபாய் பணபரிசும் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டார். மேலும், அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தலைவரும், அக்கறைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டதரணி எம்.ஏ. அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா உட்பட ஊர் முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top