ஸெய்ன் ஸித்தீக்
இன்று (2023.06.17) இறக்காமம் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட அம்பாரை மாவட்ட மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடாத்தியது. குறித்த போட்டியில் 11 பிரதேச செயலகங்களின் அணிகள் பங்குபற்றின.
இறக்காமம் குளக்கரைக் காட்சி மைதானத்திலே போட்டிகள் மிகவும் விமர்சையாக நடைபெற்றன. போட்டிகளை இறக்காமம் பிரதேச செயலாளர் எம் எஸ்.எம். றஸ்ஸான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல். நௌபீர் அவர்கள் நடாத்தி முடித்தார்.
இறுதிப் போட்டியில் நிந்தவூர், திருக்கோயில் ஆகிய அணிகள் மோதின. வெற்றிக் கேடயத்தை நிந்நவூர் அணியினர் தட்டிச் சென்றார்கள்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களும், CBO தலைவர்களும் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் M.S.M.றஸ்ஸான் அவர்கள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தியதுடன்
போட்டியில் கலந்து கொண்ட அணிகளையும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் நன்றி கூறி பிரதேச செயலாளர் அவர்களால் வாழ்த்துத் தெரிவிக்கட்பட்டது.
மாவட்ட செயலகத்திலிருந்து கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் போட்டி ஏற்பாடுகளைக் கவனித்து இறக்காமம் பிரதேச செயலாளரைப் பாராட்டினர்.