ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலிய உளவாளிகளுக்கு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

 


இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக கூறி ஈரானில் நால்வருக்கு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோரே இவ்வாறு குற்றவாளிகளாக கூறப்பட்டனர்.

உளவாளிகள் என்று கூறப்படும் இவர்களிடமிருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூக்குத் தண்டனை

ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலிய உளவாளிகளுக்கு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை | Iran Executed 4 People For Spying For Israel


மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section