வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேற என்ன செய்ய வேண்டும்?

 



முஹம்மது நஜீம் பாத்திமா நலிபா ✍️


வாழ்வில் முன்னேறும்போது நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்வார்கள். அவர்கள் சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள்.


செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டால் தளர்ந்துவிடாதீர்கள். எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு வாழ்வை மேற்கொண்டால் நிச்சயம் வெற்றியடைய முடியும்.


எப்போதும் உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். மற்றவர்கள் கூறுவதை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள்.


நீங்களே சுயமாக முடிவெடுக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவரை உங்கள் பெற்றோர்கள் முடிவெடுத்து இருப்பார்கள். இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள். இதுதான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம்.



இந்த வேலையை என்னால் செய்ய முடியவில்லை என எண்ணாதீர்கள். இன்று செய்ய முடியாமல் போகலாம். ஆனால், நாளை நிச்சயமாக வேலையை உங்களால் செய்ய முடியும்.


உங்களை பிடிக்காத, உங்களை கவிழ்க்கும் வேலைகளை செய்யும் நபர்களை சமாளிக்கும் தந்திரங்களை கற்றுக் கொண்டு அதனை செயல்படுத்துங்கள்.


எப்போதும் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். யோசிக்காமல் பேசும் சில வார்த்தைகள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம்.


உங்கள் லட்சியத்தை எந்த சூழ்நிலையிலும்; விட்டுக் கொடுக்காதீர்கள். இன்று வெற்றிகரமான நபர்களாக இருப்பவர்கள் எல்லாம், தங்கள் குறிக்கோளை விட்டுக் கொடுக்காமல் உழைத்தவர்கள்தான்.


நம்மை விட வயதில் மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்லும் அறிவுரையை உதாசினப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். அனுபவத்தைவிட ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது.


வாழ்க்கையில் முன்னேறும்போது தோல்விகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.


'தோல்விதான் வெற்றியின் முதல் படி".


தோல்விகளை சந்திக்க சந்திக்க அனைத்தையும் எதிர்த்து நின்று, தைரியமாக செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில் அடைய முடியும்..



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section