சில வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
அந்தச் சம்பவத்தினால் கட்சி உறுப்புரிமையைக் கூட இழக்கும் நிலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களாக பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தமது அரசியல் பயணத்தை நிறுத்தவில்லை.
எதிர்காலத்தில் புதிய கட்சியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமை தாங்குகிறார்.
எனினும், இந்த அமைச்சர்கள் தமது எதிர்கால அரசியல் போக்கு மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.