அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 


இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் கடுமையாக தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய் அறிகுறிகள் தென்படும் சாதாரண நபராக இருந்தால், முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் பரசிட்டமோல் எடுத்துக்கொள்வது பொருத்தமானதாக இருக்குமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Fever Effect In Sri Lanka Important Announcement


கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்

இதேவேளை,கடந்த சில நாட்களாக கிராமப்புற மருத்துவமனைகளில், இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் அதிகரிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சமூகத்தில் கோவிட் வைரஸ் பற்றிய கவலையில்லை, எனவே இந்த அறிகுறிகள் மீண்டும் தோன்றினால் சற்று கடினமாக காணப்படும்.எனவே தகுந்த வைத்திய ஆலோசனைகளை பெறுவது சிறந்தது.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Fever Effect In Sri Lanka Important Announcement


இதன்படி, சுவாச அமைப்பு தொடர்பான சுவாச நோய்கள் பொதுவாக காணப்படும். இவற்றிலிருந்து சிறு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள்,பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்,முதியவர்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டும்.

மேலும், சமூக விலகல்,முகமூடி அணிதல்,கை கால்களை சுத்தமாக வைத்திருத்தல், முத்தமிடுதல்,கட்டிப்பிடித்தல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த வைரஸ் நிலைகளில் இருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section