கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 


இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இருப்பினும் 2022 முதல் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

இதேவேளை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை 2023 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி முடிவடையும்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Connecting Students To Intermediate Classes


இதனை தொடர்ந்து, பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்த பின்னர் 2023 ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மாத்திரமே தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான கோரிக்கை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Connecting Students To Intermediate Classes

உயர்தர பாடப் பிரிவு இல்லாத பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் 2022 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section