மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது

 


(பாறுக் ஷிஹான்)


THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை (அரிய வகை புலி) ஒன்று மூதூர், 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.


"மீன்பிடி பூனை" என அழைக்கப்படும் இப்பூனை வன ஜீவராசிகள் திணைக்களத்தில் (Department of Wildlife Conservation, Sri Lanka) ஒப்படைக்கப்பட்டது.


மேலும் இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் பொது மக்களினால் நேற்று முன்தினம் (02) பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இப்பூனையினால் தாம் பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 



இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது. 


இவை தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section