70 இலட்சம் ரூபாவுக்கு விதைப்பை கடத்தல்!

 


சிறுநீரக கடத்தல் தொடர்பில் வௌிப்படுத்தப்பட்ட பொரளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் விதைப்பை கடத்தலும் இடம்பெற்றுள்ளதாக "அத தெரண உகுஸ்ஸா" தகவல் வெளியிட்டுள்ளது.


சிறுநீரகக் கடத்தல் மேற்கொள்ளப்பட்ட பொரளை தனியார் வைத்தியசாலை தொடர்பில் அத தெரண உகுஸ்ஸா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பல அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டது.

இந்த உறுப்புக் கடத்தல் தொடர்பில் உக்குஸ்ஸாவினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​குறித்த வைத்தியசாலையில் விதைப்பை கடத்தலும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வைத்தியசாலைக்கு சிறுநீரக தானம் செய்ய ஆட்களை அறிமுகப்படுத்திய ´பாய்´ எனப்படும் பிரதான தரகர் விதைப்பைகளை தானம் செய்ய ஆட்களையும் அறிமுகப்படுத்தியதாக அததெரண உகுஸ்ஸாவிற்கு தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொடுக்கப்படும் ஒரு விதைப்பையை 70 லட்சம் ரூபாய்க்கு குறித்த நபர் ஏலம் கோரியுள்ளார்.

குறித்த மோசடியில் சிக்கிய இளைஞர் ஒருவர் அத தெரண உகுஸ்ஸாவிற்கு கருத்து தெரிவித்திருந்தார்.

தனது தேவைகளை பூர்த்தி செய்யவும், வீடு வாங்கவும் தனது விதைப்பைகளை தானமாக வழங்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

எனினும் சிறுநீரகத்தை தானமாக வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை பணம் வழங்காத காரணத்தினால் இந்த இளைஞன் தனது விதைப்பையை தானமாக வழங்க மறுத்துள்ளார்.

அது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அந்த இளைஞன்,

பாய் என்ற நபருக்கு வைத்தியசாலையில் வைத்து எனது தம்பி சிறுநீரகத்தை கொடுத்தான். 22 இலட்சம் ரூபாய் கொடுத்தார்கள். 32 இலட்சம் எனக்கூறி 22 இலட்சம் ரூபாய்தான் கொடுத்தார்கள். தம்பியின் பணத்தை என்னிடம்தான் கொடுத்தார்கள். வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் வைத்துதான் பணம் தந்தார்கள். 


தம்பி கொடுத்ததால் எனக்கும் கடன் இருந்ததால் வீடு வாங்க வேண்டும் என்பதால் நானும் கொடுக்க இருந்தேன். கொடுக்க செல்லும் போது எனது உடல் எடை அதிகம் என கூறினார்கள். உடல் எடையை குறைக்க கூறினார்கள். பின்னர் பாய் என்னிடம் கேட்டார். உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்று. நான் ஆம் என்றேன். உனக்கு இடது பக்க விதைப்பையை கொடுக்க விருப்பமான என 70 இலட்சம் ரூபாய் தருவதாக கூறினார். நான் அதற்கு விருப்பம் தெரிவித்தேன். 


எந்த வைத்தியசாலை என நான் கேட்டேன். தம்பி சிறுநீரகத்தை கொடுத்த வைத்தியசாலையில்தான் என்றார். 70 இலட்சத்திற்கு கொடுக்க நான் விரும்பம் தெரிவித்தேன். பின்னர் 70 இலட்சம் தருவதாக அவர் கூறினார். இதை கொடத்த பின்னர் குழந்தைகள் பிறக்காது என அவர் தெரிவித்தார். இதற்கு விருப்பமா என கேட்டார். பணம் கிடைப்பதாலும் கடன் இருப்பதாலும் விருப்பம் என கூறினேன். பணம் தராததால் நான் செய்யவில்லை. பின்னர் விதைப்பை கொடுக்க நான் செல்லவில்லை.

சிறுநீரகக் கடத்தல் மட்டுமின்றி விதைப்பை கடத்தலும் நடைபெற்றதாக தெரியவரும் இந்த வைத்தியசாலையில் சட்டவிரோதமான முறையில் மனித உறுப்புக் கடத்தலுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் வரை உகுஸ்ஸா தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section