நாட்டில் கொவிட் தொற்று மீண்டும் வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் வாரங்களில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவுள்ள நிலையில், கொவிட் ஆபத்து இன்னும் அதிகமாக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் முன்னரைப் போல இப்போது குறிப்பிடத்தக்க எந்த சுகாதார கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும், நாடு சுற்றுலாப் பயணிகளின் வருகையிலேயே தங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் 8 கொவிட் மரணங்கள் பதிவானதுடன், 150 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படாமலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.