S.M.Z.சித்தீக் (DMC)
கட்டாரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் FIFA உலகக்கிண்ண கால்பந்துப் போட்டியைப் பார்வையிட வருகை தந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களின் பண்பாட்டை உலகிற்குப் புடம் போட்டுக்காட்டும் செயற்பாடாக இது பதிவாகியுள்ளது.
ஜப்பானியர்கள் விளையாடாத போட்டியாக இருந்தாலும் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் ஜப்பான் நாட்டவர் அரங்கை முழுக்க சுத்தம் செய்த பிறகே வெளியே செல்கிறார்கள். ஒரு கத்தார் நாட்டவர் நீங்கள் இதை கேமராவிற்காக செய்கிறீர்களா என்று கேட்டதற்கு. "இல்லை ஜப்பானியர்கள் யாரும் தங்களுக்கு பின்னே குப்பையை விட்டு செல்ல மாட்டார்கள், எந்த இடமாகினும் அதை நாங்கள் மதிப்போம்" என்று ஒரு ஜப்பானியர் குப்பையை எடுத்துக் கொண்டே கூறினார்.
இப்படிப்பட்ட; உலகிற்கு முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழும் ஜப்பான் மக்களை "சீதேவிகள்", (Goddesses) "மனிதப்புனிதர்கள்" (Human saints) எனும் உயர்வுச் சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பதில் எமது "Today Ceylon" ஊடக நிறுவனமும் திருப்தி அடைகிறது.