கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி தடுக்கலாம்? பெண்களே அவசியம் தெரிஞ்சிகோங்க....

 



 இன்றைக்கு பல பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.  இது 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. 


இது ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இதனை எளிதில் நீக்குவது மிகவும் கடினமானதாகும். 


எனவே, பெண்கள் அனைவருக்கும் இப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.


அந்தவகையில் இதன் அறிகுறிகள் என்ன? இதனை எப்படி தடுக்கலாம் என்று பார்ப்போம்.      


கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால்?

நம்முடைய உடலில் செல்கள் தோன்றி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால், வைரஸ் தொற்று காரணமாக கர்ப்பப்பை வாய் பகுதியில் செல்கள் உற்பத்தியாகும். ஆனால் அவை மறைவது இல்லை.


இதனால் மிக அதிக அளவில் செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். நாளடைவில் இந்த செல்கள் உருவாக்கம் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்கிறோம்.


 எவ்வளவு நாட்களில் ஏற்படும்? 

 ஆணிடமிருந்து பெண்ணுக்கு வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக புற்றுநோய் ஏற்படாது. வைரஸ் தொற்று புற்றுநோயாக மாற குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும். 


அறிகுறிகள்

 ஆரம்ப நிலை புற்றுநோய் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாது. கொஞ்சம் பாதிப்பு தீவிரமான நிலையில் தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.


மாதவிலக்கின் போது ரத்தத்துடன் துர்நாற்றமும் வீசலாம். 


காரணம் என்ன? 

பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது

பெண்கள் மிக இளம் வயதில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது

வேறு பாலியல் நோய் தொற்று இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

புகைப்பழக்கம், போதை பழக்கம்   

எப்படி தடுப்பது? 

 மகளிர், மகப்பேறு மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


21 வயதைக் கடந்துவிட்டால் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து பாப்ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டும்.


மிகவும் பாதுகாப்பான முறையில் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section