வாழ்வில் ஒரே ஒரு திருமணம் செய்து கொள்வதே சவாலாக காணப்படும் நிலையில் 61 வயது முதியவர் ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்ய உள்ளார்.
இந்தோனேசியாவை சேர்ந்த இந்த முதியவர் செய்து கொள்ளப்போகும் திருமணம் பற்றி இப்போது வைரலாக பேசப்படுவதுடன் ஏற்கனவே தன்னை விட்டு பிரிந்த தன்னுடைய முன்னாள் மனைவியையே திருமணம் செய்ய இருக்கிறார் என்பது இன்னும் சுவாரஸ்யமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திருமணம் செய்து கொண்டே வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு மத்தியில் இவர் 88 வது முறையாக திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தன்னுடைய முன்னாள் மனைவி திரும்பி வரும்போது என்னால் அவரை மறுக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளதுடன் நாங்கள் பிரிந்து மிக நீண்ட காலம் ஆகிவிட்டது ஆனால் எங்களுக்கிடையே உள்ள காதல் இன்னும் மிக வலிமையாகவே இருக்கிறது என்று அந்த 61 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.
தனது 14வது வயதில் முதலாவது திருமணம் செய்து கொண்ட இவர் தான் திருமணம் செய்தது தவறென்றும் மிக இளம் வயதில் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது தவறையும் செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பல திருமணங்களை செய்து கொள்ள தொடங்கிய இவர் இதுவரையில் 88 திருமணங்களை செய்து கொண்டுள்ளார் மேலும் இந்த திருமணத்தின் மூலம் தங்கள் காதலை இன்னும் பலப்படுத்தி வாழ்க்கையை உற்சாகமாக வாழப் போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.