30 ஆண்டுகளுக்கு உறைய வைக்கப்பட்ட கருவழி பிறந்த இரட்டையர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் டென்னஸ்ஸி (Tennessee) மாநிலத்தில் நடந்தது.
ஆக நீண்ட காலமாக உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து பிறந்த குழந்தைகள் இவர்களே.
பெற்றோர் ரேச்சல் ரிஜ்வேயும் (Rachel Ridgeway) பிலிப் ரிஜ்வேயும் (Philip Ridgeway) அதனை நம்ப முடியாமல் வாயடைத்துப் போயினர்.
1992ஆம் ஆண்டில் செயற்கைக் கருத்தரிப்பு வழி உருவான கருக்கள் உண்மையில் இன்னொரு தம்பதிக்குச் சொந்தமானவை.
அவை 2007ஆம் ஆண்டு வரை சேமிப்பில் வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் அவை கருக்களைத் தானமாகப் பெறும் நிலையத்திற்குக் கொடுக்கப்பட்டன. ரிஜ்வே தம்பதி அந்தத் தானம் வழி பயனடைந்தனர்.