அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமானது நகரும்

 



தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகவடஅகலாங்கு11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


அடுத்த 24 மணித்தியாலங்களில் அது பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section