*முஹம்மது நஜீம் பாத்திமா நலிபா* ✍️
*அடிமைத்தனம் என்றால் என்ன?*
ஏதாவது ஒரு பழக்கம் தொடர்பில் அதிகமான ஈடுபாடு ஏற்படுவதன் மூலம் இந்த அடிமைத்தனம் ஏற்படுகின்றது. அது உள்ளத்திலும் சரி உடலிலும் சரி இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக மது,போதை, ஆபாசம், புகைப்பிடித்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய விளைவாகும்.இது தொடர்பில் அதிகமாக மூளையில் சமநிலையற்ற தன்மை ஏற்படும்.
போதை
போதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஒருவரை அடிமையாகும் தன்மை இதற்கு உண்டு. இதனால் ஈர்க்கப்படுபவர்களின் வாழ்க்கையை சரித்து மகிழ்ச்சியை முற்றாக ஒழிப்பது மட்டுமின்றி அவர்களின் உடல் நலத்தை பாதிக்கவைத்து அவர்களை கடனாளியாக தெருவில் நோயாளியாக மாற்றி விடுகிறது.
போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது என்பதற்கு சான்றாக பிள்ளைகளின் கைகளில் தொலைபேசியையும், தெருவோரக் கடைகளில் சிகரெட்டும் கையுமாக அழையும் மனிதர்களைக் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் மது, ஆபாசம், போதைப்பொருள் இவை அனைத்தும் அனைவருக்கும் மிக எளிதாக மக்களுக்கு கிடைக்கின்றது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தல் தடை செய்யப்பட்ட போதிலும் தற்போது கல்லுரி மாணவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் போதை மற்றும் ஆபாசம் என இதனை உபயோகிப்பது குறித்து சந்தேகம் இல்லை.
போதைப் பழக்கத்தை தூண்டும் காரணிகள்
1) ஆர்வம் ( curiosity )
2) பிறரிடம் இருந்து கற்றுக் கொள்வது ( learned behaviour)
3) சுய விருப்பு
4) புறக்கணிப்பு
பெற்றோர்களுக்கான எச்சரிக்கை
• உங்கள் பிள்ளைகள் பொய் கூறி காசு கேட்பார்கள் அல்லது உங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுப்பார்கள்.
• உதடு, பற்களில் கரை, சோர்வு, முகப் பாவனை, தனிமை, எரிச்சல் குணம் என்பன தென்பட்டால் கவனம் செலுத்துங்கள்.
• நன்றாக பேசிய பிள்ளைகள் திடீர் என பேசாமல் இருப்பது, அது குறித்து மாணவர்களை கவனம் செலுத்துங்கள்.
• போதைக்கு அடிமையாகி உள்ளார் என்பது தெரிய வந்தால் அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.
• அதன் விளைவு குறித்து அன்பாக அறிவுரை கூறுங்கள்.
பெற்றோர் பங்களிப்பு
• பெற்றோர்கள் பிள்ளைகளின் முன்னால் சண்டையிடுதல், புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
• பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச வேண்டும்.
• உங்கள் பிள்ளைகளை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் பிள்ளைகள் உங்களை வெறுக்க நேரிடும்.
எனவே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களே உங்கள் கைகளில்