பிரதேச செயலகங்கள் அதிகமாகப் பெறப்படும் நிறுவனங்களில் பிரதேச செயலகங்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ், கல்வித் துறை, இலங்கை சுங்கம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம், உள்ளுராட்சிச் சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் மது வரி திணைக்களம் என்பன இலஞ்சம் அதிகம் இடம்பெறும் நிறுவனங்களாகும் என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களில் இலஞ்சம் பெறுவது தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று கூறும் ஆணைக்குழு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படாத பல வழக்குகள் இருப்பதாகவும் கூறுகிறது.
நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை முன்னூறுக்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.