போட்டோ, வீடியோ ஆதாரத்துடன் அனுப்பினால் அதிரடிப் பரிசு

 


யாழ். மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களுக்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் 10 வீத தொகையினை சன்மானமாக வழங்குவதென யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது.


யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.


மேலும் யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும். 


வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள் குப்பைகளை வீசி விட்டுச் செல்கின்றார்கள். அதற்கு அவ்வீதியில் உள்ள மக்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும், அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்து குற்றப்பணம்  அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி. மணிவிண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


அவ்வாறு குற்றமிழைப்பவர்களிடம் இருந்து அறவிடப்படும் குற்றப்பணத்தில் 10 வீதம் ஆதாரம் தருபவர்களுக்கு சன்மானமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section