அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் உணவுப் பாதுகாப்பு தேசிய செயற்திட்டம் ஆரம்பம்



(சர்ஜுன் லாபீர்)


உணவு பாதுகாப்பு மற்றும் போசனையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கிராமிய பொருளாதார புனர்வாழ்வு கேந்திரத்தை வலுவூட்டம் செய்யும் பல்பிரிவு கண்கானிப்பு பொறிமுறையினை அரச அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்ச்சித் திட்டம் இன்று(15) அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்ளஸ் தலைமையில் அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும் இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்,அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டீ

வீரசிங்க,முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதவுல்லாஹ்,பைசால்காசிம்,டீ.கலையரசன்,முன்னாள் அமைச்சர் தயா கமகே, அனோமா கமகே,முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளர் கலப்பதி, உட்பட ஜனாதிபதியின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர்,உள்ளூராட்சி மன்றங்களின் 

தலைவர்கள்,உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள்,முப்படைகளின் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section