50 பேரின் உயிரை காவு கொண்ட புயல்
TODAYCEYLON
October 30, 2022
திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பிலிப்பின்ஸ் நாட்டில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் தெற்கு பிலிப்பின்ஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிலிப்பின்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கினால் குறைந்தது 42 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலுல், 8 பேர் நால்கே புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடுமையான வெள்ளப்பெருக்கினால் மரங்கள் பல வேரோடு அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் பலவும் நிலச்சரிவில் புதைந்தன என்றனர்.
பிலிப்பின்ஸில் உள்ள தீவுகள் ஆண்டுதோறும் 20 புயல்களை எதிர்கொண்டு வருகிறது. பிலிப்பின்ஸ் பசுபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. இந்த பசுபிக் நெருப்பு வளையத்தில் அதிக அளவில் எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.