பங்களாதேஷில் காணாமல் போன நடிகையின் உடல் சாக்குமூட்டையில் சடலமாக கிடந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீப காலமாகவே பிரபல நடிகர், நடிகைகள் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்தும், சில வியாதியினால் பாதிக்கப்பட்டும் இறந்து வருகிறார்கள். அதிலும் சிலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அதிலும் கடந்த ஆண்டு தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இன்னும் அவரின் மரணத்திற்கு காரணம் என்ன என்று தெரியாமல் புரியதா புதிராக உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது சடலமாக சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நடிகையின் பெயர் ரைமா இஸ்லாம் ஷிமு. இவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. 1998 ஆம் ஆண்டில் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன் ரைமா இஸ்லாம் ஷிமு காணாமல் போனார். இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்கள்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜனவரி 17ஆம் திகதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் ஒரு சடலம் கிடைத்துள்ள தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அந்த சடலம் 45 வயது இருக்கும் என்று கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த சடலத்தை மீட்டு டாக்காவில் உள்ள சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
பரிசோதனையில் அது ரைமாவின் உடல் தான் என்று உறுதி செய்யப்பட்டது. பின் ரைமாவின் உடலை போலீஸ் ரைமா உறவினர்களிடம் ஒப்படைத்தது.
இவரின் இறப்பிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்த சம்பவம் பங்களாதேஷ் திரையுலகம், ரசிகர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ரைமா இஸ்லாம் ஷிமுவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கொலை செய்து இருப்பார்கள்? கொடூரமாக அவர் தலையை துண்டித்து வைத்ததன் பின்னணி என்ன? என்று பல கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறது.