தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் – கைது செய்யப்பட்டால் 3 வருட சிறை


வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இணங்காணப்பட்டால் 3 வருட சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.
Advertisement
அதன் பின்னர் குறித்த நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர். வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்.
இதே வேளை இந்த அறிவித்தை கவனத்தில் கொள்ளாதவர்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புதுறையினரால் இணங்காணப்பட்டு மருத்துவ கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் அகற்றல் சட்டத்தின் கீழ் 3 வருடங்கள் சிறை தண்டனைக்கு உட்டுப்படுத்தப்படுவார்கள். அத்தோடு 14 நாட்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section