2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
சம்மாந்துறை தேர்தல் தொகுதியில்
UPA கட்சியின் இறக்காமம் வேட்பாளராகிறார் சகோதரர்
K.L. சமீம் LLB அவர்கள்.
அதனால் அவரின் வெற்றிக்காக இறக்காமம் பிரதேச மக்கள் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
இதுவரை காலமும் எமது பிரதேச மக்கள் அடுத்த ஊர் வேட்பாளர்களுக்கே வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தார்கள்
அதற்கான முதல் வாய்ப்பை கடந்த பொதுத் தேர்தலில் தேசிய காங்ரஸ் எமக்கு தந்தும் நாம் அதனை நழுவவிட்டு
துரதிஷ்டசாலியாகி நின்ற அந்த கசப்பான சம்பவத்தை அனுபவமாகக் கொண்டு இம்முறையும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
எமக்கான பிரதிநிதியொருவரை நாம் பெறும்வரை முயற்சிப்போம்.
இம்முறை தேசிய காங்ரஷ் இறக்காமத்தில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை அதன் தேர்தல் யுப்தி இத்தேர்தலில் சாய்ந்தமருது, சம்மாந்துறை, அக்கரைப்பற்று என வியூகம் அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் எமது எதிர்பார்ப்பு ஒரு பெரும் ஏமாற்றத்தையே தரும் என்பது திண்ணம்
இம்முறை UPA கட்சியானது எமது ஊர் சார்பில் அதன் அமைப்பாளராகிய
மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் நன்கு அறியப்பட்டவரான
சட்டத்தரணி சமீம் அவர்களை வேட்பாளராக நிறுத்த இணக்கம் தெரிவித்திருப்பதானது எமக்கு பெரும் மகிழ்ச்சியே
அதனால் கட்சிக்கும் அதன் ஸ்தாபகத் தலைவர் M.T.ஹசனலி அவர்களுக்கும் எமது நன்றிகள்.
வெற்றி தோல்விக்கு அப்பால் இறக்காமத்தின் அடையாளத்தை
எடுத்தியம்புவதில் நாம் முன்னிற்போம்
அன்புள்ள இறக்காமம் வாழ் உறவுகளே
இது நாம் சுயநலமாய் சிந்திக்கவேண்டிய காலம்
எமது ஊரின் முன்னேற்றமே எமது முன்னேற்றம்
அடுத்தவனின் பற்களை நம்பியிருப்பதை விட
எங்கள் முரசே மேல் என்பதை இனியும் உணராமல் இருந்துவிட முடியாது
ஊரின் வெற்றிக்கான எமது பயணத்தில் கட்சிகளைத் துறந்து
எல்லோரும் ஒன்றுபடுங்கள்
சமீம் brother ஒரு துடிப்பான இளைஞர்
சட்டத்தரணி ஊர் பற்றுள்ளவர்
பிரதேசத்தில் மட்டுமல்ல எமது மாவட்டம் முழுவதிலும் அனைவரோடும் அன்பாய் பழகும் சுபாவம் உள்ளவர் இவர்
எனவே எனது வாழ்த்துகளோடு நீங்களும்
இதில் இணைந்து வாழ்த்திக் கொள்ளுங்கள்
வெற்றி மகுடத்தில் ஒளி வீசித் திகழும் இரண்டு வைரங்கள் நம்பிக்கையும் துணிச்சலுமே
மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்
உங்களுக்கு ..
ஜெபுறாஸ் காசீம்