மாதுளம் பூவில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும்...!!

மாதுளம் பழம் மட்டுமல்லது மரத்தின் பூக்கள், பட்டைகள், கொழுந்து, பிஞ்சு போன்றவற்றை தாராளமாக உண்ணலாம். ஆனால் எந்த நோய்க்கு,  எவ்வளவு, எப்படி, எப்பொழுது என்பதை முழுமையாக தெரிந்து உண்ண வேண்டும்.

பெண்களை போன்றே ஆண்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்து. மாதுளை பூவை நன்கு காய வைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி சேர்த்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர தாது விருத்தியடையும்.
 
உடல் உஷ்னத்தினால் சில சமயங்களில் சிறுநீருடன் ரத்தம் கலந்து  வெளியேறும். இதற்கு தலை சிறந்த காய் மருந்து என்றே கூறலாம். மாதுளம் பூ, கசகசா, வேப்பம் பிசின் ஆகியவற்றை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு  வந்தால் சிறுநீருடன் ரத்தம் கலந்து வருவது நிற்கும்.
 
மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் நரம்புகள் வலிமை பெறும். குறிப்பாக நரம்புத் தளர்ச்சியினால் அவதிப் படுபவர்களுக்கு இது ஒரு மாமருந்து.
 
இரத்த மூலத்தினால் அவதி படுபவர்கள் அதிக செலவு செய்யாமல் மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் இரத்த மூலத்திலிருந்து விடு படலாம்.

தலையில் மாதுளம் பூக்களை வைத்துக் கொண்டால் தலைவலி தீரும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.
 
தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி தீர மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
 
புழு வெட்டு பிரச்சனையால் தலையில் வழுக்கை போன்று உள்ளதா? மாதுளம் பூ சாறு எடுத்து அந்த இடத்தில் தேய்த்து வர விரைவில் புழு  வெட்டு சரியாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section