கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா கடமையை பொறுப்பேற்றார்



கிழக்கு மாகாண ஆளுநராக அம்மணி அனுராதா யகம்பத் திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (12) உத்தியோகபூர்வமாக தமது கடமையை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும்மான சரத் வீரசேகர மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேச அமைப்பாளர் எஸ்.எம்.எம் இர்ஷாத் (அதாப்) பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர்கள் அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட நிலையிலே அனுராதா யஹம்பத் தனது உத்தியோகபூர்வ கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section