இந்தியாவில் ஐதராபாத்தில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட இடத்திலேயே இன்னொரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த 26 நிரம்பிய கால்நடை வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் பொலிஸார் சரியாக 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இவர்களை பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.
அந்த பெண்ணை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதன் பின் அந்த பெண்ணின் மூக்கை மூடி கொலை செய்து, பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள்.
அங்கு இருக்கும் சித்தல்குட்டா என்ற பகுதியில்தான் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் இன்னொரு உடலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று அந்த இடத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உடல் குறித்து பொலிஸாருக்கு எந்த விதமான தடயமும் கிடைக்கவில்லை. இந்த உடலை தற்போது பொலிஸார் பிரேத பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்பே இதில் மர்மம் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மரணம் பெரும்பாலும் கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். பெண் வைத்தியர் கொல்லப்பட்டது போலவே இந்த சம்பவம் நடந்து இருக்க வாய்ப்புள்ளது. அதனால் கைது செய்யப்பட நான்கு பேரையும் இது தொடார்பாக விசாரிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.